பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்த தவறை குறும்படமாக போட்டு காண்பிப்பார் கமலஹாசன். போன சீசனில் கூட ஜூலி சொன்ன பொய்யை அப்படி தான் குறும்படமாக வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார். அது முதல் பிக் பாஸ் குறும்படம் என்றாலே கலவரமாகிவிடுவார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள். ஆனால் இந்த இரண்டாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மைத்தன்மை என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.

அதிலும் ஐஸ்வர்யா விஷ்யத்தில் எப்போதுபே அவருக்கு தான் சாதகமாக இருக்கிறார். இந்த  சீசனில் மட்டும் பிக் பாஸ் நியாயமாக நடந்து கொண்டிருந்தால் ஐஸ்வர்யா எப்போதோ வெளியேறி இருப்பார். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடைபெறவில்லை.. கடைசி வரை ஐஸ்வர்யாவை காப்பாற்றி வருகிறார் பிக் பாஸ்.

இதற்கு எதற்கு தேவை இல்லாம இத்தனை பேர இந்த போட்டியில கலந்துக்க வைக்கனும் பேசாம ஐஸ்வர்யாவை மாட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட வேண்டியது தானே. என மக்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பினாலும் கூட, ஐஸ்வர்யாவிற்கு எதிராக எந்த கேள்வியும் கேட்காமல் அமைதி காத்து வருகிறார் பிக் பாஸ். பிக் பாஸ் டாஸ்க் ஒன்றின் போது ஒருமுறை விஜயலஷ்மியின் கண்களில் ஐஸ்வர்யா வலி நிவாரணி ஸ்ப்ரே ஒன்றை அடித்தார்.

அது கூறித்து கேள்வி எழுப்பிய போது நான் அப்படி செய்யவில்லை என மறுத்துவிட்டார். ஐஸ்வர்யா ஸ்ப்ரே அடித்த காட்சியை ஹாட் ஸ்டாரில் இருந்தும் கூட நீக்கிவிட்டது பிக் பாஸ் குழு. இதனால் பிக் பாஸ் ரசிகர்களே ஐஸ்வர்யாவிற்கு என குறும்படம் ஒன்றை தயாரித்திருக்கின்றனர். இந்த குறும்படத்தில் ஐஸ்வர்யா சொன்ன பொய் அப்பட்டமாக வெளியாகி இருக்கிறது. ஒரு பொய் சொன்ன ஜூலிக்கே குறும்படம் போட்ட பிக்பாஸ், ஐஸ்வர்யாவை தொடர்ந்து தப்பிக்க வைக்க முயன்றாலும் மக்கள் அவரை விடுவதாக இல்லை. என்பதையே உணர்த்துகிறது இந்த குறும்படம்.