மீண்டும் ஹரியுடன் இணையப்போகும் சூர்யா; ஹீரோயின் கூட அனுஷ்கா தானாம்; அப்போ படம் பேர் சிங்கம்4-ஆ…?
இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் சிங்கம். போலீஸ் அதிகாரியாக சூர்யா பட்டையை கிளப்பிய இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படம்.
இதன் முதல் பாகத்தை தொடர்ந்து சிங்கம்-2 , சிங்கம்-3 என ரசிகர்களை திணறடித்து விட்டனர் சூர்யாவும் ஹரியும்.இப்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படம் நவம்பரில் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், மோஹன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து, ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க இருக்கிறது.
அதன் பிறகு ஹரியுனான கூட்டணியில் இந்த படம் எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திலும் கூட அனுஷ்கா தான் ஹீரோயினாம். இந்த மூவர் மீண்டும் இணைவதால் சிங்கம் படத்தின் 4வது பாகமா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர் சிலர். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.