தன்னுடைய 16 வயதில் 'பிளஸ் டூ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சுஜா வருணி, இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு. மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தாலும் இவரால் கதாநாயகியாக நிலைக்க முடியவில்லை.

இந்நிலையில் இவருக்கு மிகப்பெரிய ரீஎன்ட்ரியாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதை தொடர்ந்து பலர் இவரை பற்றி பேச ஆரம்பித்தனர். 

அப்போது இவர் கடந்த 11 வருடமாக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து வரும் செய்தியும் வெளியாது.

மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியான போது , இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், சிவகுமார் தாங்கள் காதலித்து வருவது உண்மை, விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என கூறினார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் தங்களுடைய காதலையும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதையும் உறுதி படுத்தியுள்ளார் சிவகுமார்.  இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "நல்ல படியாக 11 வருடம் நிறைவடைந்து விட்டது. நீ தான் என்னுடைய முழு பலம், நான் எப்போதும் உன் அதிகபடியான காதலுக்கு உண்மையாக இருப்பேன், என கூறி விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார். மேலும் இவர் சுஜாவிற்கு மோதிரம் போடும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.