Asianet News TamilAsianet News Tamil

மொக்க வாங்கிய பாலா மேக்கிங்... நெருக்கம், லிப்லாக் ஸீன் இருந்தும் ஆபாசமாக இல்லாத "ஆதித்யா வர்மா" ! என்ன மாஸ்?

விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா பட டீசரைப் பார்த்த பலரும் படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்ததில் தவறு இல்லை என்பது டீஸரை பார்க்கும்போது புரிகிறது என்கிறார்கள்.

Adhithya varma better then Varma
Author
Chennai, First Published Jun 16, 2019, 3:38 PM IST

விக்ரம் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா பட டீசரைப் பார்த்த பலரும் படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்ததில் தவறு இல்லை என்பது டீஸரை பார்க்கும்போது புரிகிறது என்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான "அர்ஜுன் ரெட்டி" படத்தை த்ருவ் விக்ரமை வைத்து  "வர்மா" என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். ஆனால் படத்தை பார்த்து விட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் பாலா இயக்கிய இப்படம் துளி கூட அர்ஜுன் ரெட்டியுடன் கொஞ்சம் கூட ஒத்து போகவில்லை, படு மொக்கையான மேக்கிங் என குப்பையில் தூக்கிப் போட்டதுமட்டுமல்லாமல், காசு செலவானாலும் பரவாயில்ல இதை சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதால், புதிய இயக்குனர் மற்றும் குழுவுடன் சேர்ந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என அறிவித்திருந்தனர்.

Adhithya varma better then Varma

இதையடுத்து அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் உதவியாளராக இருந்த கிரிசாயா த்ருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் தொடங்கினர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஆதித்ய வர்மா படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. புதுமுக ஹீரோ என்பது கூட தெரியாமல் துருவ் விக்ரம் மாஸாக என்ட்ரி கொடுத்து அசத்தியுள்ளார்.

ஆதித்ய வர்மா டீஸரை பார்த்தவர்கள் பாலா ரீமேக் செய்த டீஸருடன் ஒப்படும்போது, நெருக்கமான ஸீன், லிப்லாக் ஸீன் என காட்டியுள்ளபோதிலும் அது ஆபாசமாகவே இல்லை. பாலா இயக்கி வெளியான அந்த  டீசரைவிட 100 மடங்கு செம்ம ஸ்டைலீஷாக, சூப்பராக  உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Adhithya varma better then Varma

இந்த டீசரைப் பார்த்த தயாரிப்பு நிறுவனமும், பக்கா மாஸாக உள்ளது இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என  கூறியுள்ளது.  அதே போல ரசிகர்களும் பலரும் படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்ததில் தவறு இல்லை, என்பது டீஸரை பார்க்கும்போது புரிகிறது என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios