பட வாய்ப்புகளுக்காக, நடிகைகள் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். ஆனால், தற்போது ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் வீடியோக்களை நடிகைகள் வெளியிடுவது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அந்த வகையில் சமீப காலமாக, நடிகை தமன்னா, அஞ்சலி, சயிஷா, சமந்தா, என பல முன்னணி நாடிகள் தொடர்ந்து, அவர்கள் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டனர். அந்த வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தற்போது காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' , 'இனிமே இப்படித்தான்', 'மீன் குழம்பும் மண் பானையும்', 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' உள்ளிட்ட தமிழ் படங்களில் கவர்ச்சியாக நடித்து, பிரபலமான நடிகை ஆஷ்னா சவேரி இவருடைய வொர்க்அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோ இதோ: