சின்ன தாயே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விசித்ரா. இந்த படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து', விஜயுடன் 'ரசிகன்' உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், கடைசியாக 2010 ஆம் ஆண்டு 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்கிற படத்தில் ருக்மணியா நடித்தார். 

இந்த படத்தை தொடர்ந்து இவருடைய தந்தை இறந்த பின்னர், திரைப்படங்களில் இருந்து விலகி திருமணம் செய்துக்கொண்டு புனேவின் செட்டில் ஆனார். 

தற்போது திரைப்படங்களில் இவர் நடிக்காவிட்டாலும், அவ்வப்போது திரைப்பட விழாக்களில் முகம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது .

அந்த புகைப்படம் இதோ...