தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் குணச்சித்திர நடிகையாகவும், கவர்ச்சி நடிகையாகவும் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை விசித்ரா.  

ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சிறு சிறு கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கிய இவருக்கு, நாளடைவில் இதே போன்ற கதாப்பாத்திரங்கள் மட்டுமே வந்தது.

தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பின், ஓட்டல் பிசினஸ் செய்து வந்த இவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான பின், மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். 

இதற்காக சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி நன்கு பழக்கமான இயக்குனர்களுக்கு அதனை அனுப்பி, நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார். மேலும் சமூகவலைதளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதற்கு, ரசிகர்கள் பலர் வரவேற்கும் விதமாக பதில் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் " தமிழ்ல முன்னனி கதாநாயகியா வந்திருக்க வேண்டியது :(( சத்தியராஜ் மாம்ஸால போயடுச்சு"  என்று டுவிட் போட்டார்.

இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகை விசித்ரா கூறியுள்ளதாவது...  "என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து நடிகர் சத்யராஜ் அவர் இயக்கிய முதல் படமான 'வில்லாதி வில்லன்' படத்தில் சிறந்த கதாபாத்திரம் கொடுத்தார்.  ஆனால் தமிழ் படங்கள் ஒரே மாதிரியான கதைகள் மட்டுமே வெளியானதால்,  சில நல்ல கதாபாத்திரங்களை தன்னால் ஏற்று நடிக்க முடியாமல் போய் விட்டது என பதில் கொடுத்துள்ளார்.