Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை தடுப்பது எப்படி?... நடிகை த்ரிஷா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ...!

இதனிடையே திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது பங்கேற்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

Actress Trisha Released Corona Awareness Video
Author
Chennai, First Published Mar 20, 2020, 9:00 PM IST

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 10,000 பேரின் உயிரை பறித்துவிட்டது. கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த சீனா தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால், இந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பரவி அங்கிருக்கும் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.

Actress Trisha Released Corona Awareness Video

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மால்கள், விளையாட்டு அரங்கங்கள், அருட்காட்சியகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ள பிரதமர் மோடி அவர்கள், வரும் ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Actress Trisha Released Corona Awareness Video

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

இதனிடையே திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது பங்கேற்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கிடைத்துள்ளது தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அனைவரும் சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி நடிகை த்ரிஷாவும் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்... முதல் முறையாக மனம் திறந்த சமந்தா...!

யுனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதர் என்ற முறையில் த்ரிஷா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில்,  கொரோனா வைரஸ் பரவாமல் எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது என்றும்,   உங்களுக்கு உதவ வேண்டுமென்றால் எங்களுக்கு நீங்கள் உதவுங்கள் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios