பிரபல பாலிவுட் முன்னணி நடிகை ஸ்வேரா பாஸ்கர், நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வீரே வெட்டிங்க'. முழுமையாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், நான்கு தோழிகளின் வேறுபட்ட வாழ்க்கை முறையை மிகவும் ஸ்வாரஸ்யமாக கூறி இருந்தார் இயக்குனர்.

நான்கு பெண்களில் ஒருவராக நடித்திருந்தனர் நடிகை  ஸ்வேரா பாஸ்கர். கணவரிடம் இருந்து அவர் எதிர்ப்பார்க்கும் சந்தோசம் கிடைக்காததால், இவர் இயந்திரம் பயன்படுத்தி, சுய இன்பம் கொள்ளும் காட்சியும் இந்த படத்தில் இடம்பெறும். இந்த காட்சிக்கு பாலிவுட் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர்  ஸ்வேரா பாஸ்கர் சுய இன்பம் காண்பது போல் அந்த படத்தில் இடம்பெற்ற காட்சியின் குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை, அவருடைய அப்பாவிற்கு அனுப்பி இந்த புகைப்படம் குறித்து விளக்கம் கூறுமாறு கேட்டிருந்தார்.  அதற்கு ஸ்வேரா ‘அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான், நீங்கள் இதை நேரடியாகவே என்னிடம் கேட்டு இருக்கலாம், அதை படத்திற்காக நான் நடித்தேன், ஏனென்றால் நான் ஒரு நடிகை.

ஆனால், இதை என் தந்தையிடம் கேட்பது உங்கள் வீரம் அல்ல’ என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். 

இவரின் இந்த பளார் பதிலடிக்கு ரசிகர்கள் பலர்  ஸ்வேரா பாஸ்கருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.  ஸ்வேரா பாஸ்கர் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில், தனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்காக இவருக்கு பிலிம் ஃபேர் அவார்டு, ஜீ அவார்டு, இன்டர்நேஷனல் பிலிம் அகாடமி அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.