Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் இருக்க போர் அடிக்குதா? அப்போ இதை செய்யுங்க... நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி!

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கொரோனா பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.
 

actress srushti dange corona awareness announce poem competion
Author
Chennai, First Published Mar 31, 2020, 12:37 PM IST

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கொரோனா பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.
  
இந்நிலையில், மக்களிடம் கொரோனா  சார்ந்த விழிப்புணர்வை, தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு,
"கொரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது.

actress srushti dange corona awareness announce poem competion

12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இதில் பங்கெடுப்பவர்கள் அனுப்பலாம் என்றும், தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், இந்த போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கவிஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பரிசு தொகை காசோலையாக வழங்கப்படும் என்று கட்டில் திரைப்படத்தின் கதாநாயகி சிருஷ்டி டாங்கே தெரிவித்திருக்கிறார்.actress srushti dange corona awareness announce poem competion

மேலும் முதல் பரிசாக,  ரூ .25,௦௦௦, இரண்டாம் பரிசு : 15,௦௦௦ மூன்றாம் பரிசு : 10,௦௦௦, ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள் வழங்கப்பட உள்ளது. மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம் இருப்பதாக இந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பி.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார்.  ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களை வைரமுத்து- மதன் கார்க்கி ஆகியோர் எழுதுகிறார்கள்.
 ஒளிப்பதிவை வைட்ஆங்கிள் ரவிசங்கர் கையாளுகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios