இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் "கட்டில்" திரைப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்து வருகிறார். 
இந்த படத்தை மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை இன்று முதல் களைகட்டியுள்ள நிலையில், ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்த கட்டில் படக்குழுவினர் பொங்கலிட்டி கொண்டாடியுள்ளனர். 

தமிழக பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு புடவையில் தயாராக இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் பொங்கல் பண்டிகையை கட்டில் படக்குழுவினர் மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என  இ.வி.கணேஷ்பாபு தெரிவித்துள்ளார்.