சென்னை வந்தடைந்தார் ஸ்ரீ ரெட்டி...! அடுத்த அதிரடியில்...ஹன்சிகா தமன்னா..?!

actress srireddy reached chennai and started her work
First Published Jul 17, 2018, 5:54 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



சென்னை வந்தடைந்தார் ஸ்ரீ ரெட்டி...! அடுத்த அதிரடியில்...ஹன்சிகா தமன்னா..?!

தெலுங்கு சர்ச்சை நாயகியான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பிற்காக தன்னை  படுக்கைக்கு அழைத்ததாக கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது  தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

கடந்த மாதம் முழுவதும் தெலுங்கு திரை நட்சத்திரம் பற்றி வாய் திறந்த  ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்

அந்த வரிசையில்,முதலில் சிக்கியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்,  பின்னர் நடிகர் ஸ்ரீ காந்த், நடன இயக்குனர் லாரன்ஸ், தற்போது சுந்தர் சி.....

இதற்கு அடுத்த படியாக வேறு யார் பெயரெல்லாம் இழுக்க  போராங்களோ என சற்று கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீ  ரெட்டி வெளியிட்ட வீடியோவில், சுந்தர் சி  பற்றி பேசி இருந்தார். மேலும் தெலுங்கு திரை உலகில் தனக்கு தீர்வு  கிடைக்கவில்லை என்றும், சென்னை வந்து சில நபர்கள் மீது வழக்கு  தொடர உள்ளதாகவும் அவர் வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்

நேற்று தான் அவர் சென்னை வருவதாக தெரிவித்து இருந்தார். அதற்குள் இன்று சென்னை வந்தடைந்து உள்ளார். தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கு முன்னதாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் நடிகை ஹன்சிகா, தமன்னா,காஜல்,சமந்தா என அனைவரையும் இழுத்து உள்ளார்.

அதாவது, " ஒரு  சிலர்  நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்னுடைய லிஸ்ட் மிக பெரியது என்று.,... ஆனால் ஹன்சிகா, தமன்னா,காஜல்,சமந்தா இவர்கள் லிஸ்ட் ஓபன் செய்தால்  தானே தெரியும் .. யாருக்கு பெரிய  லிஸ்ட்  என்று.....என  தனது  பேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டு  உள்ளார்

மேலும், நடன இயக்குனர் லாரன்ஸ்க்கு சில கேள்விகளை முன்னிறுத்தி உள்ளார்

மேலும், கடந்த இரண்டு நாட்கள் முன்னதாக, தமிழ் இண்டஸ்ட்ரி டைம் என குறிப்பிட்டு  தமிழ் திரை நட்சத்திரங்களை பற்றி புட்டு புட்டு வைத்து  வருகிறார் ஸ்ரீ ரெட்டி

இதுவரை, நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை பற்றி மட்டும் பேசி வந்த  ஸ்ரீ ரெட்டி  தற்போது, நடிகைகளின்  பெயர்களும்  பட்டியலிட்டு  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கோலிவுட் வட்டாரம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது