சினிமா வி.வி.ஐ.பிகள் தன்னிடம் நடத்திய காதல் விளையாட்டுகளை அம்பலப்படுத்தியே பிரபலமான நடிகை ஸ்ரீரெட்டி, ஒரு சிறிய விளம்பர இடைவெளிக்குப் பின் மீண்டும் காமக் களத்தில் குதித்துள்ளார். இம்முறை தனிப்பட்ட நபர்களைப் பஞ்சராக்காமல் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரிக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்.

இன்று முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்..."SIRI"-க்கு எவ்வளவு தகவல் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீக்கும் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் ரொமாண்டிக் காதல் வாழ்க்கை முறை பற்றி அனைத்து தகவலும் தெரியும். பல பெண்களிடம் இருந்து இன்னும் தகவலை தோண்டித்துருவிப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். 

சினிமா இண்டஸ்ட்ரியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள இது மிகவும் உபயோகமாக இருக்கும். போக நடிக்க வாய்ப்புத் தருகிறேன் பேர்வழி என்று பெண்களை சீரழிக்கும் கூட்டத்திடமிருந்து அவர்களைக் காப்பாற்றவும் இது உதவிகரமாக இருக்கும்’என்கிறார் ஸ்ரீரெட்டி.