ராகவா லாரன்ஸ் மாஸ்டரை நேரில் சந்தித்து ஆசியும் அட்வான்ஸும் வாங்கியபிறகு சற்றே அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இன்று விஷாலுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திருக்கிறார். விஷால் பெயரைக் குறிப்பிடாமல் அவர் குறித்து கொடுத்த ‘க்ளு’க்களுக்குப் பதில் அவர் பெயரையே சொல்லியிருக்கலாம் என்கிற அளவுக்கு அப்பட்டமாய் இருக்கிறது அவர் மீதான குற்றச்சாட்டு.

நடிகர் சங்கத்தில் முக்கியப்பொறுப்பில் உள்ளவர், அதே அந்தஸ்துள்ள முக்கியப் பொறுப்பில் தயாரிப்பாளர் சங்கத்திலும் உள்ளவர். முன்னணி நடிகைகளுக்கு மட்டுமின்றி ஜூனியர் ஆர்டிஸ்டுகளுக்கும் இவர் கொடுக்கும் செக்ஸ் டார்ச்சர் ஓவர். அத்தனைக்கும் என்னிடம் பக்கா ஆதாரம் உள்ளது. இவர் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கொண்டு, இனியும் இதுபோன்று பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதை உடனே நிறுத்தவேண்டும்’ என்கிறார் ஸ்ரீரெட்டி.

இதே ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு முன்பு, ‘தமிழ் இண்டஸ்ட்ரியில் பலபேரைப் பற்றி பாலியல் குற்றச்சாட்டுகள் சொன்னதால் எனக்கு வாய்ப்பு தர தயங்குகிறார்கள். அந்த தயக்கம் தேவையில்லை என்பதை நடிகர் சங்கத் தலைவர் விஷாலை சந்தித்து விளக்கவிருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இப்போதைய ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு விஷாலை சந்தித்ததற்காவா, அல்லது இனி சந்திப்பதற்கான நிர்பந்தமா என்பதுதான் புரியவில்லை.