தனக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் சம்பவங்கள் நடைபெறுவதால் எதிரிகளைக் கண்டதும் சூட்டுத்தள்ள துப்பாக்கி வைத்துக்கொள்ளும் லைசன்ஸ் கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தை நாடியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இதனால் அவரால் முன்னர் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்கள் நடுங்கிப்போயிருக்கிறார்கள்.

வாரத்தின் ஏழு நாட்களையும் ஏதாவது ஒரு பரபரப்புக்கு உட்படுத்தி செய்திகளில் சிறப்பாக இடம்பெற்று வரும் நடிகை ஸ்ரீரெட்டி பைனான்சியர் சுப்ரமணி கடந்த 21ம் தேதி இரவு, சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்தியதாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி பொருட்கள் சேதமானதுடன், தனது ஆடையைப் பிடித்து அவர் இழுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, இரண்டு தரப்பையும் விசாரித்த போலீஸார், ஸ்ரீ ரெட்டி நாடகமாடியதாக கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால், தன்னுடைய வீட்டில் இருந்த சிசிடிவி காட்சி மற்றும் பைனான்சியர் சுப்ரமணியத்துடன் பேசிய ஆடியோ ஒன்றையும் நேற்று (25ம் தேதி) வெளியிட்டு மீண்டும் குட்டையைக் குழப்பினார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று  வந்த ஸ்ரீ ரெட்டி, தனக்கு எதிரிகள் அதிகம் இருப்பதால், துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அப்படி லைசன்ஸ் தரப்பட்டால் அவர் ஏற்கனவே தன்னை பாலியல் தொந்தரவு செய்த  குற்றவாளிகளையும் சுடுவாரா அல்லது இனிமேல் தொந்தரவு செய்ய உள்ளவர்களுக்காக மட்டுமா என்பது தெரியவில்லை.