ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பிவிட்டு தமிழகத்தில் மையம் கொண்டது ஸ்ரீரெட்டி எனும் கவர்ச்சி புயல். திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.


கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார்.

அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, திடீரென அமலா பாலுக்கு ஆறுதல் கூறி போட்டுள்ள பதிவு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சமீபத்தில் அமலா பாலுக்கும், மும்பையைச் சேர்ந்த இசைக்கலைஞரான பாவ்னிந்தர் சிங் என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. பாவ்னிந்தருக்கு அமலா பால் லிப் டூ லிப் கிஸ் அடிப்பது போன்ற புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

ஆனால் அமலா பால் தரப்பில் இருந்து அப்படி ஒரு திருமணம் நடக்கவே இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில், “கவலைப்படாதீங்க அமலா பால், உங்க  பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார். எனக்கு பஞ்சாபி மீது நம்பிக்கை உள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

அமலா பால் இரண்டாவது திருமணம் செய்யவில்லை என்று மறுத்துள்ள நிலையில், ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு தேவையில்லாத விவாதத்தை கிளப்பியுள்ளது. அப்ப அமலா பாலுக்கு உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா? பொய் சொல்லுறாங்களா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.