"எனக்கு 20, உனக்கு 18" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரேயா, வெளிநாட்டினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா மீண்டும், திரையில் அதகளம் செய்ய உள்ளார். தனுஷ், மஞ்சுவாரியார் நடிப்பில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அப்படத்தில் மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவு செய்துள்ள ஸ்ரேயா, தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடி வருகிறார். அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களில் தன்னை யாரும் அடங்கிவிடக்கூடாது என நினைத்த அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.தற்போது ஸ்ரேயா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் செம வைரலாகி உள்ளது. 

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சுற்றுலா சென்றுள்ள ஸ்ரேயா, அங்கு ஓட்டலில் தங்கியுள்ளார். அந்த ஓட்டலின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் ஸ்ரேயாவின் கவர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.