கவர்ச்சி காட்டுவதில், மீரா மிதுனுக்கு சமமாக போட்டி போட்டு வரும், ஷாலு ஷம்மு தற்போது நடிகை மீரா மிதுன், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், ட்விட்டரில் பிரபலங்களை குறி வைத்து வம்பு வாங்கி வரும், நடிகை மீரா மிதுன், கடந்த சில தினங்களுக்கு முன், தமிழ் திரையுலகிலும்... வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக கூறி நடிகர் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் குறித்து விமர்சித்து பேசினார். இதை கண்ட விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை வன்மையாக கண்டிக்கும் விதத்தில், தாறுமாறாக காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

மீரா மிதுனை கண்டிக்கும் வகையில், இயக்குனர் பாரதி ராஜா முதல் முதலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து மாடலிங் துறையை சேர்ந்த, சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு போன்றவர்களும் மீரா மிதுன், விஜய் மனைவி சங்கீதா பற்றியும், சூர்யா மனைவி ஜோதிகா பற்றியும் பேசியதை கண்டித்தனர். 

இந்நிலையில் ஷாலு ஷம்மு, மீரா மிதுன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, மீரா மிதுன் தூண்டுதலின் பெயரில் பல செயலிகளில், என்னுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அவதூறு செய்திகளை பரப்பி வருவதாகவும், அவருடைய இந்த இழிவான செயலால் நான் மிகுந்த மன உளைச்சலும், இந்த உலகத்தையே விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என, என்னும் அளவிற்கு என்னையும் என் மனதையும் புண்படுத்திவிட்டார். என் புகழுக்கு கலங்கள் விளைவிக்கிறார்.

மேலும் மீரா மிதுன் தூண்டுதல் பெயரில் அவருக்கு தெரிந்த நபர்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் போனிலும், சமூக வலைத்தளத்திலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே மீராமிதுன் மற்றும் அவருடைய ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தன்னை போல் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு வாழ்வளித்த, உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.