தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. ஜி.வி.பிரகாஷ் உடன் டார்லிங், விஷ்ணு விஷாலுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் 2, ஜெய் உடன் கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். 


தற்போது தமிழில் அறிமுக இயக்குநர் விவேக் இயக்கி வரும் பாக்ஸர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதில் பாக்ஸராக அருண் விஜய், அவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று பட புகழ் ரித்திவிகா சிங் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், சோசியல் மீடியாவில் நான் வில்லாதி வில்லி என்பதை நிரூபித்துள்ளார் சஞ்சன கல்ராணி. 

கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி, தமிழ் படங்களின் வாய்ப்பை அதிகரிக்க பக்கா பிளான் போட்டுள்ளார். அதற்காக புதுவிதமான போட்டோ ஷூட்களை நடத்தும் சஞ்சனா, தனது ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இளசுகளை சூடேற்றும் விதமாக சஞ்சனா கல்ராணி பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் சோசியல் மீடியாவை தெறிக்கவைக்கிறது. 


தற்போது குட்டையான கறுப்பு நிற உடையில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.