நடிகை சமந்தா பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில், கலந்து கொண்டு, சேலையை விளங்கி விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டு முடிவு பெற்றதை தொடர்ந்து, கடந்த ஆண்டில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த கதாப்பாத்திரம், சிறந்த நாயகி, சிறந்த நடிகர், என பல்வேறு பட்டியல்களின் கீழ் பல விருது விழாக்கள் நடத்தப்பட்டு விருதுகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது விழா நடத்தியுள்ளது. இந்த விருது விழாவில் பல்வேறு பட்டியல்கள் கீழ் விருதுகள் கொடுக்கப்பட்டது. நடிகை நயன்தாராவிற்கு கூட, மறைத்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவாக ஒரு விருதும், விஸ்வாசம் படத்திற்காக ஒரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே விருது விழாவில், நடிகை சமந்தாவும் கலந்து கொண்டுள்ளார். லைட் பிங்க் நிற சேலை கட்டி வந்த அவர், விருது விழாவில் விதவிதமான போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட்டில், தான் கட்டி இருந்த சேலையை விளக்கி, போஸ் கொடுத்துள்ளார். கட்டுக்கடங்கா கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படங்கள் இதோ...