திரைத்துறையை பொறுத்தவரை மற்ற துறைகளுடன் ஒப்பிட்டால் பாலியல் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக பல நடிகைகள் சமூக வலைத்தளத்தில் me too என பதிவிட்டு தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முன்பெல்லாம் நடிகைகள் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகள் இருந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல் இருந்த காலம் மலையேறி 
போய், உடனுக்குடன் சமூக வலைத்தளத்தில் தங்களுக்கு நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து ஆதாரத்தோடு கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கோலிவுட், டோலிவுட் என திருமணத்திற்கு பிறகும், கதாநாயகியாக தன்னுடைய திரையுலக ராஜ்யத்தை தொடர்ந்து வரும் நடிகை சமந்தா...  தன்னுடைய பத்தாண்டு கால சினிமா வாழ்க்கையில் தனக்கு ஒரு முறை கூட  பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

சமீபத்தில்... மதுரையில் பிக்சி மொபைல்ஸ் என்ற செல்போன் கடையை  சமந்தா திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லாத் துறைகளிலும் உள்ளதைப்போல சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகள் உள்ளன. அவர்களால் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் பெயர் கெடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சினிமாத் துறையின் பெயரையும் கெடுப்பதாக உள்ளது. ஆனால் சினிமாவில் எனக்கு எந்தக் குறையும் இல்லை. எனது பத்தாண்டு கால சினிமா வாழ்வில் இதுவரை எனக்கு எந்த விதமான பாலியல் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. சினிமா துறை என்பது எனக்கு கடவுளுக்கு சமமானது” என்று கூறியுள்ளார்.

இவர் இப்படி கூறியுள்ளது, ஸ்ரீரெட்டி போன்று தொடர்ந்து தங்களுக்கு திரையுலகில் பாலியல் தொந்தரவு நடைபெற்றதாக குற்றங்களை முன் வைத்து வரும் நடிகைகளை கடுப்பாக்கி உள்ளது.