ஒரு அந்தரங்க வதந்தியை இவ்வளவு ஸ்போர்டிவாவா எடுத்துக்குவீங்க சமந்தா டார்லிங்?...

உண்மைக்குப் புறம்பான செய்திகள் வரும்போது அதைப் படித்துவிட்டு கொந்தளிக்காமல் கூலாக எடுத்துக்கொள்வதற்கு ஒரு பக்குவப்பட்ட மனது வேண்டும். அது என்னிடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது என்று நேற்றைய தனது ட்விட்டர் பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார், திருமணமானபிறகும் தமிழ்,தெலுகு ரசிகர்களின் டார்லிங்காகவே நீடிக்கும் சமந்தா.

actress samantha about her pregnancy


உண்மைக்குப் புறம்பான செய்திகள் வரும்போது அதைப் படித்துவிட்டு கொந்தளிக்காமல் கூலாக எடுத்துக்கொள்வதற்கு ஒரு பக்குவப்பட்ட மனது வேண்டும். அது என்னிடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது என்று நேற்றைய தனது ட்விட்டர் பதிவின் மூலம் நிரூபித்திருக்கிறார், திருமணமானபிறகும் தமிழ்,தெலுகு ரசிகர்களின் டார்லிங்காகவே நீடிக்கும் சமந்தா.actress samantha about her pregnancy

சமந்தா தனது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் அவரவர் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர்.இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்திகள் ஏற்கனவே சில முறை வெளிவந்த நிலையில் தற்போது ட்விட்டரில் தனது பெயரை, ‘பேபி அக்கினேனி’ எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

சமந்தாவின் அடுத்தப் படமான ‘ஓ பேபி’ படத்தின் டீசரை ஷேர் செய்த, அவரது கணவர் நாக சைத்தன்யா ‘பேபி’ என்றே சமந்தாவை குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையே ட்விட்டர் ஹேண்டிலை ‘பேபி அக்கினேனி’ என சமந்தா மாற்றியதும், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி ‘ஜெட்’ வேகத்தில் டோலிவுட்டில் பரவக்காரணமானது.actress samantha about her pregnancy

இச்செய்திகள் மேலும் மேலும் றெக்கை கட்டிப்பறந்துகொண்டிருப்பதைப் படித்துக்கொண்டிருந்த சமந்தாவுக்கு ஒரு சிலர் நேரடியாகவே கேள்வியாகக் கேட்க, ...டாமிட்...அப்படியா அவ கர்ப்பமா இருக்காளா? சேதி கன்ஃபர்ம்னா அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்’ என்று உச்சக்கட்ட ஜோக் அடித்துக் கலாய்த்திருக்கிறார் சமந்தா.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios