கவர்ச்சி உடையில் முரட்டு நடனம்... சாய் பல்லவியின் வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி...!
8 வருடத்துக்கு முன் நடிகை சாய் பல்லவியின் சால்சா டான்ஸ் வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
.
மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. போதுவாக சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சாய் பல்லவியின் நடன வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வெள்ளித்திரையில் கால் பதிப்பதற்கு முன்பு சின்னத்திரையில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியிலும் சாய் பல்லவி கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். 8 வருடத்துக்கு முன் நடிகை சாய் பல்லவியின் சால்சா டான்ஸ் வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். காரணம் ஸ்லீவ்லெஸ் உடையில் தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இது சாய்பல்லவி தானா? என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.