ஆந்திர மாநில அரசில் அமைச்சர் பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாததால் விரக்தியில் இருந்த நடிகை ரோஜாவுக்கு முக்கிய பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளது.

 

ஜாதிகள் அடிப்படையில் அமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்எல்ஏ நடிகை ரோஜாவுக்கு முக்கியப்பதவி கிடைக்கவில்லை.  ஆந்திராவில் மொத்தமுள்ள் 175 சட்டப்பேரவை தொகுதியில் நடந்த தேதலில் 151 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ரோஜா.

 
 முதலில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி பதவியேற்றார். அதன் பின்னர் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் முறையாக ஆந்திர சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில அரசின் தொழிற்சாலைகள் உள் கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.