நடிகை ரோஜா சென்ற விமானம் விபத்து...! அதிர்ச்சி தகவல்...!
நடிகை ரோஜா உள்ளிட்ட 72 பயணிகளுடன், நேற்று இரவு 10.25 மணியளவில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிரங்கியது.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக இந்த விமானத்தின் டயர் தீப்பிடித்தது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், விமானத்தில் பற்றிய தீ முற்றிலும் அனைக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்த விமானத்தில் பயணம் செய்த 72 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கி விடப்பட்டனர்.
நடிகை ரோஜா:
இந்த விமானத்தில் நடிகையும் அரசியல் வாதியுமான ரோஜாவும் பயணம் செய்துள்ளார். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகளுடன் நடிகை ரோஜா ஒரு வீடிவோ எடுத்து தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.