'ஒரு ராத்திரியில் ஒரு மணிநேரம் மட்டுமே என்னுடன் உல்லாசமாக இருக்க வருகிறாயா. உனக்கு இரண்டு லட்ச ரூபாய் தருகிறேன்’ என்று வாட்ஸ் அப் மூலம் அழைப்பு விடுத்த வாலிபரை சந்தி சிரிக்கவைத்திருக்கிறார் கேரள நடிகை.

கேரளாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காயத்ரி அருண். தற்போது கேரள சீரியல்களில் காயத்ரி அருண் மிக முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். கேரள இல்லங்களில் காயத்ரி அருணை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு காயத்ரி அருண் கேரள மாநிலத்தில் பிரபலம் ஆனவர்.

   சீரியல்கள் மட்டும் அல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் காயத்ரி அருண் நடித்துள்ளார். மேலும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் காயத்ரி அருண் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் காயத்ரி அருணை ஏராளமானவர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

 காயத்ரி அருண் தன் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை சமுக வலைதளங்களில் பதிவு செய்வதும் வழக்கம். மேலும் தன்னுடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் ரசிகர்கள் அளிக்கும் ஃபீட் பேக்குகளையும் மனதார ஏற்று அதற்கு பதில் அளித்து வருவதால் காயத்ரி அருணுக்கு சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் ஏராளம்.

 மேலும் காயத்ரி அருண் தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் லைக் இடுவதும், சேர் செய்வதும் உண்டு. இந்த நிலையில் காயத்ரி அருண் அண்மையில் வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவு  அதிர்ச்சிகரமானதாக இருந்தது.

  ரோஹன் குரியகோஸ் எனும் இளைஞர் நடிகை காயத்ரியுடன் பேஸ்புக் மெசேஞ்சரில் செய்த சேட்டிங்கின் ஸ்க்ரீன் சாட் தான் வெளியிடப்பட்டிருந்தது. அந்த ஸ்க்ரீன் சாட்டில் அந்த இளைஞர், ஒரு நாள் இரவு தன்னுடன் வந்த தங்க முடியுமா?  என்று கேட்டு அதற்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக  கூறியிருந்தார். மேலும் இந்த விவகாரம் நம் இருவருக்குள்ளாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இச்செய்திக்கு அதிக அதிர்ச்சி அடையாத காயத்ரி, தனது முகநூல் பக்கத்தில்... உன் தாயும் சகோதரிகளும் உன்னிடமிருந்து பாதுகாப்பாக இறைவனை வேண்டுகிறேன்’ என்று செருப்படி பதில் கொடுத்திருக்கிறார்.