Asianet News TamilAsianet News Tamil

காரில் இருந்து இறங்கி செம ஆட்டம் போட்ட நடிகை ரெஜினா...! வைரலாகும் வீடியோ...!

actress rejina dance in road
actress rejina dance in road
Author
First Published Aug 1, 2018, 12:40 PM IST


சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் பாப்பா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கேசன்ரா. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கினார். 

actress rejina dance in road

அங்கு இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால். முன்னணி கதாநாயகியாக மாறினார். மேலும் தமிழிலும் இவரை பல படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். 

இதற்கு முக்கிய காரணம், இவர் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டுவது என்றும் கூறப்படுகிறது. 

actress rejina dance in road

மேலும் சமீபத்தில் இவர் நடிகர் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் ஏக்கசக்க கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்குகாட வைத்தார். 

மேலும் இவருடைய நடிப்பில் விரைவில் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', 'நெஞ்சம் மறப்பதில்லை', மற்றும் 'பார்ட்டி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

actress rejina dance in road

இந்நிலையில் ரெஜினா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் காரில் இருந்து இறங்கி, பாவாடை தாவணியுடன் ஆங்கில பாடலுக்கு நடந்துக்கொண்டே டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பின் இடைவெளியின் போது இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

#inmyfeelingschallenge had to be done!!!@champagnepapi you’ve got us South Indian girls dancin to your tunes.. 😂😋
This is the craziness that goes on between shots... 🙄😛
Video and styling: @jaya_stylist
Music supervision:#priyankatumpala pic.twitter.com/dTA1enB9Nt

— ReginaCassandra (@ReginaCassandra) July 29, 2018

 

Follow Us:
Download App:
  • android
  • ios