இந்தத் தகவல் மட்டும் இயக்குநர்,ஒளிப்பதிப்பதிவாளர் தங்கர் பச்சான் காதுகளுக்குப் போனால்,...’ஏங்க என்னங்க நடக்குது இங்க?...ஒரு நடிகை கூட காபி குடிக்கிறதுக்காக இத்தனை பேராங்க இப்பிடி பேயா அலைவீங்க’என்று கொந்தளித்திருப்பார். ஏனென்றால் சமாச்சாரம் அப்படிப்பட்டது.

விஷயம் இதுதான்...நடிகை ரெஜினா தனது கேள்விக்குச் சரியாக பதில் அளிப்பவர்களுடன் அமர்ந்து காபி குடிக்க போவதாக போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழில் கண்ட நாள் முதல் படம் மூலமாக அறிமுகமாகி பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள படம் ’எவரு’. திரில்லர் படமான இது விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த படத்துக்கு மேலும் விளம்பரம் செய்யும் வகையில் ரெஜினா ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘எவரு’படத்துக்கு நீங்கள் அளித்துவரும் அபாரமான வரவேற்புக்கு நன்றிலு. இப்படம் தொடர்பாக எனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், என்னுடன் காபி குடிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கேள்வி என்னவென்றால், ’எவரு’ படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன? என என்று கேட்டுள்ளார்.

 இந்த கேள்விக்கு சரியாகப் பதில் அளிப்பவர்கள் என்னை நேரில் சந்திக்கலாம்.என்னுடன் அமர்ந்து காபி சாப்பிடலாம் என ரெஜினா கூறியுள்ளார். இந்த போட்டியின் முடிவுகள் இன்றே அறிவிக்கப்பட்டு, நாளையே ரெஜினாவுடன் வெற்றியாளர் காபி குடிக்க செல்லவுள்ளார். ரெஜினாவின் கேள்விக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொஞ்சமும் சலிப்பின்றி பதில் அளித்து வருகின்றனர். இப்ப சொல்லுங்க. இதயெல்லாம் பார்த்தா நம்ம தங்கர் பச்சானுக்குக் கோபம் வருமா வராதா?