பிரபல கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா. பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ராஷ்மிகாவும் கன்னட நடிகர் ராக்ஷித் ஷெட்டியும் 'கிரிக் பார்ட்டி' என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

முறைப்படி தங்களுடைய காதலை வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி தற்போது இவர்களுடைய காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 'கீதா கோவிந்தம்' என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவாரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் பாடல் சமீபத்தில் வெளியானது.

அதில் காதல் காட்சியில் ராஷ்மிகா நெருக்கமாக நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சிலர் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இப்படியெல்லாம் நடிக்கலாமா...? என இவரை சமூக வலைத்தளத்தில் மோசமாக விமர்சித்தனர். 

இதனால் ரக்ஷிக் ஷெட்டி பெற்றோர் மிகவும் கொபமானதாகவும், இதைதொடர்ந்து இவர்களுடைய திருமணம் திடீர் என நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இது குறித்து இருவரும் எதுவும் பேசாத நிலையில், ராஷ்மிகா மேனேஜர் "திருமணம் நின்றதாக கூறப்படுவது வதந்தி என்றும், இந்த தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.