சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய கணவருடன் வசித்து வந்த சீரியல் நடிகை பிரியங்கா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது 32 வயதாகும், பிரியங்கா ஆரம்பத்தில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். பின், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானார். 

இந்நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில். இந்த பிரச்சனை ஏற்பட என்ன காரணம் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

பிரியாங்காவிற்கும் இவருடைய கணவருக்கும் திருமணம் ஆகி சில வருடங்கள் ஆன போதிலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டு வந்த இவர், பின் ஒரு நிலையில் குழந்தை பெற்று கொள்ள மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

குழந்தை பெற்று கொள்ள இவர் சிகிச்சை எடுத்து வந்த போதிலும், குழந்தை சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த பிரியங்கா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது. 

பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், தொடர்ந்து இவர் தற்கொலை செய்துக்கொண்ட நேரத்தில் வீட்டில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகைகள், மட்டும் இன்றி பல்வேறு துறைகளில் வேலை செய்து வரும் பெண்கள் தற்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும், உயர் பதவியை அடைய வேண்டும் என்கிற நோக்கத்திலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டு வரும் நிலையில், அவர்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது பிரியங்காவின் தற்கொலை.