திரையுலகில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில், சின்னத்திரையில் சிறு, சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பின், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் சீரியல் நடிகை பிரியங்கா.

மிகவும் தைரியமான பெண் என்று நண்பர்கள் அனைவராலும் பார்க்கப்படும் இவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் நடிக்க வந்துவிட்டாலும் படிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் "ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி `குரூப் 1' எக்ஸாமுக்கு சீரியஸா படிச்சுட்டிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட, எப்போதும் புத்தகத்தோடு தான் இருப்பேன். கிடைக்கும் நேரங்களில் தேர்வுக்கு படிப்பேன் என கூறியுள்ளார். 

மேலும் கடந்த மாதம் தான், புதிதாக ஒரு அழகு நிலையத்தை திறந்தார் என்றும், ஆனால் அவரின் எந்த ஆசைகளும் நிறைவேறுவதற்கு முன்பே இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது தங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக இவருடன் நடித்த சக நடிகர்கள் கண்களில் கண்ணீரோடு கூறியுள்ளனர்.