ஆந்திராவை சேர்ந்த, ரசிகர் ஒருவர்  நடிகை பூஜா ஹெக்டேவை பார்த்து விட்டு தான் மும்பையை விட்டு செல்வேன் என அடம்பிடித்து, அவரை பார்ப்பதற்காக ரோட்டு ஓரத்தில் உறங்கி கஷ்டப்பட்டு பின், நடிகையை சந்தித்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய தீவிர ரசிகர் ஒருவர், பூஜாவை பார்த்தே தீரவேண்டும் என ஆந்திராவில் இருந்து, மும்பைக்கு சென்றுள்ளார். பல முறை பூஜாவை சந்திக்க இவர் முயற்சி செய்தும் முடியவில்லை.

கையில் உள்ள பணம் எல்லாம் தீர்ந்த பிறகும் கூட, கண்டிப்பாக பூஜா ஹெட்க்டேவை சந்தித்து விட்டு தான் செல்வேன் என விடாப்பிடியாக இருந்துள்ளார். பின் இந்த ரசிகர் குறித்து, செய்திகள் மூலம் பூஜாவிற்கு தெரியவர, அந்த ரசிகரை ஜிம்மிற்கு சென்று விட்டு வரும் வழியில் சந்தித்து சாக்லேட் கொடுத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பின் அந்த ரசிகரிடம், தன்னை பார்க்க இப்படி ரோட்டில் படுத்து இருப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் என அறிவுரை கூறியுள்ளார். பூஜா அந்த ரசிகரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.