ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை மரீம் டிரைவ் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஆண் நண்பருடன் எந்தவித காரணமுமின்றி ஊருக்குள் சுற்றி திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர். பூனம் பாண்டே பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டத்தை மதிக்காதது, நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது என்று பல்வேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் நிர்வாணமாக காட்சியளிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அவ்வப்போது சமூக ஊடகங்களில் அதிரடியான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.  இவர் கொரோனா ஊரடங்கின்போது காதலனுக்கு முக கவசம் அணிந்து லிப் டூ லிப் கிஸ் கொடுத்தார். ஆண் நண்பருடன் மரியம் ட்ரைவில் சுற்றிய வீடியோ அவருக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க இந்த ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலானோர், இணையதளத்திலேயே மூழ்கியுள்ளனர்.

 

ஊரடங்கு முடிவுக்கு நெருங்கி வரும் நிலையில் கவர்ச்சி நடிகைகள் அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ளனர். கட்டண அடிப்படையில், இணையதளம் மூலம் கவர்ச்சி வீடியோ மற்றும் படங்களை வெளியிட்டு வரும், பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளார். இதைக்கண்ட இணையவாசிகள் சிலர், "கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால், கவர்ச்சி வீடியோ, புகைப்படங்களை பார்க்க  100சதவீதம் தள்ளுபடி வேண்டும்" என கோரியுள்ளனர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தடை செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.