தம்மை தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்து வந்த நபர் மீது முன்னாள் மிஸ் இந்தியாவும் மாடல் அழகியுமான நடாஷா சூரி புகார் கொடுத்துள்ளார் .  முன்னாள் மிஸ் இந்தியாவும் மாடல்  அழகியுமான நட்டாஷா சூரி சிங்க் ,  பிளின் ரெமெடியோஸ் என்ற  நபர் மீது புகார் அளித்துள்ளார் .  தனது வழக்கறிஞருடன் தாதார் காவல் நிலையத்திற்கு வந்த அவர் ரெமெடியோஸ் மீது புகார் கொடுத்தார் .  இதேபோல் டிசம்பர் 24-ஆம் தேதி பந்தர் குர்லா வளாகத்திலுள்ள சைபர் குற்ற புலனாய்வுப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தார் .  இந்நிலையில் தாதார் காவல் நிலையத்தில்  குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . 

தனது புகாரில் பிளின் ரெமெடியோஸ் என்பவர் தன்னைப்பற்றி ஆபாச தகவல்களை வலைதளங்களில் பதிவிட்டு வந்த என நடாஷா சூரி கூறியுள்ளார்,  இது குறித்து மேலும் தெரிவித்த அவர் , கடந்த  2019 நவம்பர் மாதம் முதல் தனக்கு  பிளின் ரெமெடியோஸ்  தொல்லைக்கொடுக்க தொடங்கினார்,  அவர் பல போலி ஆபாசச்  செய்தி கட்டுரைகளை உருவாக்கி , அதன்மூலம் என்னை தொடர்ந்து தாக்கி வந்தார் .  மேலும் குளியலறையில் நான் நிர்வாணமாக இருப்பதைப் போன்று ஒரு படத்தை வெளியிட்டு அதற்கு நட்டாஷா சூரி என பெயரிட்டு அதை சமூக வலைதளத்தில் பரப்பினார்.  அவர் இன்னும் பல ஆபாச வலைதளங்களில் இருந்து பல புகைப்படங்களை எடுத்து அவற்றுடன் என் தலைகளை சேர்த்து அவற்றிற்கு  என் பெயரிட்டு பரப்பினார் .இது போன்ற இன்னும் பல செயல்களின் மூலம் தன்னை தாக்கி வந்தார் 

இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவே இல்லை , எனவேதான்  அவர் மீது நான் புகார் கொடுத்துள்ளேன் என்றார் ,  நடாஷா சூரிகடந்த 2006ல் பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார் .  மற்றும் உலக அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தவர் ஆவார் .  பாபா பிளாக் ஷீப் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளவர் ஆவார்.  மலையாள திரைப்படமான வாக்கிங் லையர் மூலம் அறிமுகமானவர் ஆவார்.  தற்போது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் மீது நடாஷா புகார் கொடுத்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .