அட்டக்கத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்திதா ஸ்வேதா. தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் நந்திதா ஸ்வேதா, தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபரை புதுவிதமாக பழிவாங்கியுள்ளார். 

படவாய்ப்பிற்காக நடிகைகள் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அதே பாணியில் இடையழகி ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக, நந்திதா ஸ்வேதாவும் புடவையில் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. அப்போதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் நந்திதாவை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

அப்படி இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் வாஞ்சி செழியன் என்பவர் நந்திதாவிற்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பிவந்துள்ளார். இதனால் கடுப்பான நந்திதா, அதை தனது சோசியல் மீடியா ஸ்டேட்டஸ்-ல் வைத்து ஆபாச ஆசாமியை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார். 

மேலும் அதில் இதுபோன்ற நபர்களை என்ன செய்வது இவர்களுக்கு குடும்பம் இல்லையா என்றும் மிகவும் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.