எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடித்த "அன்பே ஆருயிரே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. இவரது நிஜப்பெயர் மீரா சோப்ரா. நினைவுகள் பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்கும் என்ற கதையை மையமாக வைத்து எஸ்.ஜே.சூர்யா எடுத்த இந்தப்படம் செம்ம ஹிட்டானது. அதன்பின்னர் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிலா, 'ஜாம்பவான்', 'லீ', 'மருதமலை' போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற படங்களிலும் பிசியாக நடித்து வந்த நிலா, தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இதையும் படிங்க: 'லிப் லாக்', 'குளோஸ் ரொமான்ஸ்' என அதகளம் செய்யும் பிக்பாஸ் பிரபலங்கள்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புரோமோ வீடியோ...!

 

இப்போது பாலிவுட், டோலிவுட் காலை வாரிவிட்டதால், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக வழக்கம் போல கவர்ச்சி போட்டோ ஷூட் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் மீரா சோப்ரா. ஓவர் கிளாமராக போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இளசுகளை சுண்டி இழுக்கும் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில்  "இருக்கு ஆனா, இல்லா" என்ற எஸ்.ஜே.சூர்யா பட டைலாக்கைப் போல கறுப்பு நிற உடையில் மீரா சோப்ரா கொடுத்துள்ள ஹாட் போஸ் சோசியல் மீடியாவை அதிரவைத்துள்ளது. கொசுவலை போன்ற கறுப்பு நிற டாப்பில் உள்ளாடை தெரியும் படியாக செக்ஸி போஸ் கொடுத்துள்ளார். மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவிவருகிறது.