ஜெமினி படம் மூலம் தமிழில் அறிமுகமான கிரண், அதன் பின்னர் வில்லன், அன்பே சிவம், திருமலை, வில்லன் உள்ளிட்ட பல படங்களில்ம் நடித்தார். தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார்.

 

அந்த படத்தை தொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். எப்படியாவது பட  வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கிரண். 

என்னதான் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டினாலும் பட வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இருந்தாலும் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்று தீர்மானித்துள்ள கிரண், குட்மார்னிங் மேசேஜ் உடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவை அதிரவைத்துள்ளது. கிரண் ஸ்லீவ் லெஸ் பனியன், பிங்க் நிற குட்டை டவுசர் அணிந்து சோம்பல் முறிப்பது போன்ற புகைப்படம் தான் அது. படுகவர்ச்சியாக உள்ள இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.