நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் ஓஹோவென்று புகழின் உச்சிக்குப் போன கீர்த்தி சுரேஷ் ‘ ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிசல்டால் அதளபாதாலத்துக்கு வந்துவிட்டார்.

‘சாமி’ படமே சவசவ என்று இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் பாத்திரமும், அவருக்கு வைக்கப்பட்டிருந்த மிகக் குறைந்த சீன்களும் அவரது மார்க்கெட்டை கூட்டமில்லாத மீன் மார்க்கெட் ரேஞ்சுக்கு கொண்டுவந்துவிட்டது.

‘ விக்ரமுக்கும் ஹரிக்கும் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணியும் படத்துல என் கேரக்டர் இவ்வளவு மட்டமா இருக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. 50 நாள் கால்ஷீட் குடுத்தும் 5 சீன் கூட உருப்படியா தேறலை. படம் பாத்தவங்கள்லாம் நீ விக்ரம் கூட ஜோடியா நடிச்சதால கிழவி மாதிரி இருக்கிறேன்னு கிண்டல் வேற பண்றாங்க’ என்று அழாத குறையாக புலம்பித்தள்ளும் கீர்த்தியின் கைவசம் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும் ஒரே படம் விஷால்-லிங்கு கோஷ்டியின் ‘சண்டக்கோழி2’ மட்டுமே.

ஒருவேளை அந்தப் படமும் ஊத்திக்கொண்டால் முன்னணி நடிகை அந்தஸ்து பின்னணிக்குப் போய்விடும் என்கிற நடுக்கத்தில், அடுத்து ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ராஜமவுலி படத்தில் சான்ஸ் கேட்டு ஹைதராபாத்தில் கடும் தவம் கிடக்கிறாராம்.