தெலங்கானாவில் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற சைக்கோக்களை போன்றுள்ள எல்லா கொடூர சைகைக்களையும் வேட்டையாட வேண்டுமென நடிகை கீர்த்தி சுரேஷ் கொந்தளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே உள்ள பாலத்திற்கு கீழ் பெண் ஒருவர் எரிந்த நிலையிலான சடலமாக மீட்கப்பட்டார்.  அதில் கொல்லப்பட்டவர்  27 வயதான பிரியங்கா என்பதும் அவர் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்தார் என்பது தெரியவந்தது. 

தனது இருசக்கர வாகனம் பழுதானதால் சுங்கச்சாவடி அருகே தனியாக நின்றிருந்த  அவரை அங்கிருந்த லாரி ஒட்டுனர்கள் புதருக்குள் இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரை கொலை செய்து எரித்துள்ளதாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .  இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் ,  பாதுகாப்பு மிக்க நகரம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஐதராபாத் போன்ற நகரில் நடந்த இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது,  இதில் யாரை குறை சொல்வது என எனக்கு தெரியவில்லை .  சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .  நமது நாடு பெண்கள் எந்த நேரத்திலும் வெளியில் செல்வதற்கு பாதுகாப்பு நிறைந்த நாடாக என்றைக்கு உருவாகும்.?  

இது போன்றுள்ள எல்லா கொடூர சைக்கோக்களையும் உடனடியாக வேட்டையாட வேண்டும் அந்த சைக்கோக்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்,  கொல்லப்பட்ட பிரியங்காவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .  குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் கடவுள் உதவட்டும் கர்மாவில் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது . அது தொடர்ந்து வேலை செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார் .