நடிகை கஸ்தூரி அண்மைக்காலமாக ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகவே உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் ரசிகர்கள் பலர் விமர்சிக்கும் படி உடையணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த, நெட்டிசன் பலர் உன் வயசுக்கு இது தேவையா? என்பது போல் கழுவி ஊற்றி வருகின்றனர். 

கதாநாயகி:

1991 ஆம் ஆண்டு 'ஆத்தா உன் கோயிலிலே' படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி பல முன்னணி நடிகர் படங்களில் நடித்து பிரபலமானவர். இதுவரை 50 திறக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மிகவும் தூக்கலாக கவர்ச்சி காட்டும் கதாநாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணம்:

இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆனதும் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருந்தார். பின் அவ்வப்போது அரசியல் பற்றியும், தற்போதைய அரசியல் நிலைபற்றியும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். சில சமயம் இவர் பதிவிட்ட கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்பும் சில படங்களில் மிகவும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களை ஏற்றும் நடித்தார்.

AAA திரைப்படம்:

கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த AAA திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மேலாடை இன்றி குழந்தைக்கு தாய் பால் புகட்டும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி புகைப்படம்:

இந்நிலையில் தற்போது மிகவும் குட்டையான ஆடை அணிந்து, செக்சியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை கஸ்தூரி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்த வயதில், அதுவும் இரண்டு குழந்தைக்கு தாயான பிறகு இது உங்களுக்கு தேவையா என்பது போல் கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்.