“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்குமார், கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். ஐதராபாத், சென்னை என மாறி, மாறி ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

இந்த படத்தில் நயன்தாரா, இலியானா, யாமி கவுதம் என அஜித்திற்கு ஹீரோயினாக நடிக்க உள்ளது இவர் தான் என மிகப்பெரிய லிஸ்டே சோசியல் மீடியாவில் சுற்றி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இந்தி நடிகை ஹியூமா குரேஷி நடித்து வருகிறார். முதல் முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள ஹியூமா குரேஷி, தலயுடன் சேர்ந்து சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியிருக்காராம். 

இதையும் படிங்க: அட்லிக்கு ஆப்பு வைத்த லோகேஷ் கனகராஜ்... தளபதியை “மாஸ்டர்” பிளான் போட்டு தூக்கிட்டார் போல...!

சமீபத்தில் அஜித் நடித்த பைக் பைட் சீனில் அவர் கீழே விழுந்து அடிப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சண்டை காட்சியில் ஹியூமா குரேஷி நடித்ததாகவும், அதற்காக பிரத்யேகமாக பைக் ஓட்ட பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஹியூமா குரேஷியும், அஜித்தும் ஒன்றாக இணைந்து பைட் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக பா.ரஞ்சித் இயக்கிய “காலா” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையான கேரக்டரில் ஹியூமா குரேஷி நடித்தது குறிப்பிடத்தக்கது.