தெலுங்கு திரையுலக கவர்ச்சி நடிகை அபூர்வா, தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஒருவர் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் நடித்து பிரபலமானவர்  நடிகை அபூர்வா. 

இவர் தற்போது தெலுங்கு தேச எம்.எல்.ஏ சிந்தாமணேனி பிரபாகரன் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில்,  தனது கணவரை கொலை செய்ய முயற்சி செய்வதாக யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியிட்டதாகவும், இந்த யூடியூப் சேனல் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ சிந்தாமணேனி பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் தன் மீது அவதூறு செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் அதன் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அபூர்வா கூறியுள்ளார்.

அபூர்வாவின் புகார் மனுவை பெற்று கொண்ட போலீசார் இதுகுறித்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.