திரையுலகில் பிஸியாக இயங்கி கொண்டிருந்த நடிகர் நடிகைகளை, கலகலப்பாக  குடும்பத்தோடு செலவிட வைத்துள்ளது இந்த  21 நாள் ஊரடங்கு உத்தரவு. இந்த நாட்களில் பிரபலங்கள் அனைவரும், தங்களுக்கு பிடித்த வீட்டு வேலைகள், புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, என  மனதிற்கு பிடித்த வேலைகளை செய்து பொழுதை கழித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கோயமுத்தூர் பொண்ணு , நடிகை அதுல்யா தன்னுடைய தம்பியுடன் செல்லமாக முடியை பிடித்து சண்டையிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை அதுல்யா, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஏமாளி, அடுத்த சாட்டை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில், 'நாடோடிகள் 2 ' திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், இவர் ஷூட்டிங் இல்லாததால் வீட்டில்  வீட்டில், குடும்பத்தோடு இருக்கிறார். மேலும் தன்னுடைய தம்பியை சீண்டி விட்டு இருவரும் செல்லமாக முடியை பிடித்து சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதில்... இதில் 5 வது நாளே நானும் என் தப்பியும் சண்டை போட துவங்கி விட்டோம். இது செல்லமான சண்டை தான். குடும்பத்தோடு இருக்கும் போது, நான் முதிர்ச்சியான பெண் என்பதை மறந்து விடுவேன் என அதுல்யா தெரிவித்துள்ளார். 

வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ: