நடிகை, அமலா இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014 காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து நடிகை அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.  கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான 'ஆடை' படத்தில் ஆபாச நடிகைகளுக்கு இணையாக 'ஆடையே' இல்லாமல்  நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து அவர் கொடுத்த சில பேட்டிகளில். ஒருவரை காதலித்து வருவதாக சூசகமாக அமலாபால் கூறிவந்தார்.  விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என்பது போலவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்: இப்படி நடிக்கும் நிலை வந்தால் திரையுலகை விட்டே விலகி விடுவேன்! அதிர்ச்சி கொடுக்கும் மீனா..!

சமீபத்தில் கூட அமலாபால், இசை கலைஞர் பவிந்தர் சிங்கை இறுக்கமாக கட்டி அணைத்தபடி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியது. மேலும் பவிந்தரை தான் அமலாபால் காதலித்து வருவது உறுதியானது.

இந்நிலையில் இவர்கள் திருமணம் கொரோனா பீதிக்கு இடையே அவசர அவசரமாக நடந்து முடிந்ததாக சில புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகியது. இதனை சற்றும் எதிர்பாராத அமலா பாலின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது இந்த விஷயம்.

ஆனால் இதுகுறித்து பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் கொடுத்துள்ள அமலா பாலின் தரப்பு, உண்மையில் அமலா பாலுக்கு திருமணம் நடைபெற வில்லை என்றும், பவிந்தர் ஏன் இந்த நேரத்தில் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார் என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் திருமணம் நடந்ததாக வெளியாகும் தகவல் தவறு என்றும், இந்த புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஈவண்ட் ஒன்றில் எடுக்கப்பட்டதாவும் அமலா பாலின் மேனேஜர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: தாய்மை பேரழகு..! விதவிதமான உடையில் கர்ப்பமாக இருக்கும் ரகரகமான புகைப்படம் வெளியிட்ட ஆலியா! போட்டோ கேலரி!
 

இந்த புகைப்படங்களை பவிந்தர் வெளியிட்ட சில நிமிடங்களில் நீக்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் திருமணம், அமலாபாலின் தனி பட்ட  விஷயம் தற்போது வெளியான தகவலுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அமலா பால் தரப்பு... திருமண தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.