கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கிய அருவி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர் அதிதி பாலன். முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். 

இவரின் நடிப்பு, மற்றும் துணிச்சலை கண்டு ரசிகர்கள் முதல், பிரபலங்கள் வரை வெகுவாக கவர்ந்தது. முதல் படத்தில் சற்றும் கிளாமருக்கு இடம் கொடுக்காமல் நடித்திருந்தார் அதிதி. 

அதே போல் இந்த படத்திற்கு பின், இவரை தேடி வந்த கதைகளில் கவர்ச்சி வேடங்கள் இருந்தால் ஏற்ற மறுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அதிதிக்கு, தற்போது தான் மலையாள படம் ஒன்றில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்த அதிகார பூர்வ தகவலும் வெளியானது.

இந்நிலையில் அதிதி பாலன் சமீபத்தில் நடந்த ஃபிலிம்பேர்  விருது விழாவில், மிகவும் கவர்ச்சியான உடையில் வைத்துள்ளார். பொறுத்தது போதும் என இப்போது பொங்கி எழுந்து,  படவாய்ப்புக்காக இம்புட்டு கவர்ச்சி காட்டி வருகிறார் அதிதி பாலன்.