மணிரத்னத்தின் ‘காற்று வெளியிட’ இரு வாரங்களுக்கு முன் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படங்களின் நாயகி அதிதி ராவ், தனக்கும் சினிமாவில் ஏராளமா செக்ஸ் தொல்லைகள் இருந்ததாகவும் அதற்கு ஒத்துப்போகாததால் மூன்று பெரிய படங்களை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் மனம் திறந்திருக்கிறார்.

ஆனால் அப்படி நடந்துகொண்டது யார் என்பது குறித்து அவர் மறைமுகக்குறிப்பு எதுவும் கொடுக்கவில்லை.

வாரிசு நடிகர்கள், நடிகைகளை விட வெளியே இருந்து வருபவர்களுக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் கொடுமை அதிகம் நடக்கிறதா என்று என்னால் சொல்ல முடியாது. என்னை பற்றி மட்டும் தான் பேச முடியும். புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம். ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.

இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட் பண்ண மறுத்தால் சினிமாவில் சர்வைவ் ஆவது மிகவும் கஷ்டம். அந்தக் கஷ்டத்தை நான் பலமுறை அனுபவித்தேன். இந்த முடிவுக்காக மிக முக்கியமான மூன்று படங்களை இழந்திருக்கிறேன்’.

இவ்வளவு அழகும் திறமையும் இருந்தும் ஏன் உன்னால் நம்பர் ஒன் நடிகை ஆகமுடியவில்லை என்று கேட்கிறார்கள். எனக்கு நம்பர் ஒன் இடம் வேண்டாம். செக்ஸ் டார்ச்சர் தராத இயக்குநர்களிடம் பணி புரிந்தாலே போதும்’ என்கிறார் அதிதி.