சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் கிருஷ்ணன். இவரது மனைவி விஷ்ணுபிரியா சூர்யா நடித்த மாயாவி படத்தல் நடித்த துணை நடிகை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

விஷ்ணு பிரியாவின்  தந்தை சூரிய நாராயணன் ஒரு பணக்கா தொழிலதிபர். இவருக்கு சொந்தமான தோட்டம் மற்றும் பங்களா கொடைக்கானலில் உள்ளது. விஷ்ணு பிரியாவின்  கணவர் ரமேஷ் கிருஷ்ணா போதை பழக்கத்துக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டதால் கொடைக்கானல் பங்களாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அதனால் விஷ்ணு பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவரது செய்து வந்துள்ளார். அதன்படி கொடைக்கானலில் மட்டும் ரூ.10 கோடி மதிப்பிலான பங்களா மற்றும் தோட்டம் உள்ளது. இதனை பராமரிப்பதற்காக வேலையாட்களையும் சூரிய நாராயணன் நியமித்துள்ளார்.

விஷ்ணுபிரியா தனது குழந்தைகளுக்காக சென்னையில் தங்கி இருந்துள்ளார். கொடைக்கானலில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற்காக அவ்வப்போது கொடைக்கானல் வருவார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருவார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்வார். அப்போதுதான் கொடைக்கானலைச் சேர்ந்த பிரபாகரன் என்ற கார் டிரைவர் அறிமுகம் ஆனார்.முதல் சந்திப்பிலேயே பிரபாகரன் ஜாலியாக பேசி விஷ்ணுபிரியாவை கவர்ந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. உடனே விஷ்ணு பிரியாவின் செல்போன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு எப்போது கொடைக்கானல் வந்தாலும் பிரபாகரனையே மதுரை விமான நிலையத்துக்கு வரவழைத்துள்ளார். சொகுசு பங்களா இருந்தபோதும் அதில் தங்காமல் நட்சத்திர ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கினர். மேலும் காருக்குள்ளேயே அவர்கள் அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளனர்..கொடைக்கானல் ஓட்டலில் தங்கி இருந்த போது பல லட்சம் ரூபாயை விஷ்ணுபிரியாவிடம் இருந்து பிரபாகரன் பெற்றார். ஒரு முறை பிரபாகரனின் கார் பழுது ஏற்படவே புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

தனது கள்ளக்காதலன் பிரபாகரனை சந்திக்கவே விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்ததுடன் பல நாட்கள் இங்கேயே தங்கி இருந்தார். மேலும் சென்னையில் இருந்து வரும் போது பிரபாகரனுக்கு ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

இதையடுத்த பிரபாகரனை 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த சூரிய நாராயணன் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்கும்படி விஷ்ணுபிரியாவை சமாதானப்படுத்தியுள்ளார்.

அதன் பிறகு கொடைக்கானல் பங்களாவில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் , ஊர்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் , டீக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது சல்மான் அவரது தம்பி மஜித் ஆகிய 4 பேர் மூலம் பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.இதற்காக ரூ.4 லட்சம் பணம் தருவதாக கூறிய சூரியநாராயணன் முதல் தவணையான ரூ.50 ஆயிரம் பணத்தை செந்தில்குமாரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று பிரபாகரனை அழைத்துச் சென்ற அந்த கும்பல் காருக்குள் கழுத்தை அறுத்து கொலை செய்து 500 அடி பள்ளத்தில் வீசிச் சென்றனர்.

இதையடுத்து கொலை செயலில் ஈடுபட்ட 4 போரை கைது செய்த போலீசார், நடிகை விஷ்ணு பிரியாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.அதே நேரத்தில் தொழில்அதிபர் சூரியநாராயணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.