தளபதி விஜயிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன என கேட்டால் அவரது நடனத்தை தான் பலரும் கூறுவர். விஜயின் நடனத்திறனை பாராட்டாதவர்களே கிடையாது. அவரின் நடனத்திற்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அப்படி இருக்கையில் அவர் ஒரு இளம் வாரிசு நடிகரின் நடனத்திறமையை மனமுவந்து பாராட்டி இருக்கிறார்.

உண்மையான திறமையை பாராட்டுவது என்பது தான் நாகரீகம். அந்த வகையில் யாரிடம் திறமையை கண்டாலும் பாராட்டுவது தளபதி விஜயின் பழக்கம். அந்தவகையில், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியின் நடனத்தினை சமீபத்தில் பார்த்திருக்கிறார் விஜய். அவரின் நடனத்திறமை பிடித்து போகவே, உமாபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்.

தம்பி ராமையாவின் மகன் உமாபதியின் நடிப்பில் மணியார் குடும்பம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த சந்தோஷத்திற்கு நடுவே தளபதி விஜயே பாராட்டி இருப்பது, உமாபதிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் இன்னும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.