விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னர் டைடில் வென்ற சிவகார்த்திகேயன், அதே தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். 

தன்னை ஏற்றி விட்ட ஏணியான விஜய் டி.வி.யை என்றும் மறக்காத சிவகார்த்திகேயன், அவ்வப்போது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் விஜய் டி.வி. நடத்தி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: பலத்த அடிவாங்கியும் திருந்தாத லைகா... அடுத்த படமும் இவருடன் தானாம்...!

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் செட்டிற்கு அருகே தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் நடந்துள்ளது. சிவகார்த்திகேயன் தான் விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாச்சே... இந்த செய்தியைக் கேள்விப்பட்டு சும்மா இருப்பாரா. உடனே குக் வித் கோமாளி செட்டிற்கு சென்ற அவர், அங்கிருந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: நடிகை முதல் மா நித்தியானந்த மாயி ஆக மாறியது வரை... ரஞ்சிதாவின் அசத்தல் புகைப்படங்கள்...!

அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜே மணிமேகலை, அண்ணன் சிவகார்த்திகேயனுடன் சர்ப்பிரைஸ் சந்திப்பு... குக் வித் கோமாளி செட்டிற்கு பக்கத்துல தான் ஷூட்டிங்காம்...பிசி செட்டியூலிலும் செட்டிற்கு வந்த சிவா அண்ணா. எங்க நிகழ்ச்சி குறித்து முழுவதும் பேசினார். தேங்ஸ் சிவா ப்ரோ என்று பதிவிட்டுள்ளார்.