நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 17 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.  தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்க வளாகத்தில் அனுசரிக்கப்பட்ட இதில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, மனோபாலா, அயுப்கான் மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். 

மேலும் இவர்களுடன் சிவாஜிகணேசனின் மகன்கள் ராம்குமார், மற்றும் பிரபு ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.